விவசாயிகள் மீதான ஒடுக்குமுறைகளை கைவிடும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என போராடும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுத் கிஷான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. மத்திய பாரதிய ஜனதாவின் அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 68 நாட்களாக நீடிக்கிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையை தொடர்ந்து போலீசார் போராட்டத்தை முடக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]
