அதிமுக விதிகளைத் திருத்தி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியதற்கு எதிராக முன்னாள் அதிமுக எம்பி கே.சி. பழனிச்சாமி தொடர்ந்த மனுவின் மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் ஒரு காலத்தில் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கே.சி. பழனிச்சாமி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தபோது ஓ. பன்னீர்செல்வம் அணியில் செயல்பட்ட பழனிச்சாமி, சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு […]
