சட்டப்பேரவை முடிவுகள் வெளியான பின் ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 8) தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பல்வேறு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்துவந்தது. பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களை ஆம் ஆத்மி எளிதில் பெறும் என்பதால் அக்கட்சியினர் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிவருகின்றனர். இந்நிலையில், டெல்லி […]
