70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாட்டின் தலைநகாரன டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடந்துள்ள நிலையில், வாக்குபதிவு 67.08 விழுக்காடு என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்காக மெட்ரோ ரயில் சேவைகள் காலை 4 மணிக்கே தொடங்கப்பட்டது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் களத்தில் […]
