Categories
தேசிய செய்திகள்

”அருண் ஜெட்லி_க்கு எக்மோ சிகிச்சை” உடல் நிலை மேலும் பின்னடைவு….!!

அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடமாகி  எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஆகஸ்ட் 9_ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் , பெரு நிறுவன விவகார துறை அமைச்சராகவும் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்த தேர்தலில் கூட உடல்நலகுறைவு காரணமாக தனக்கு ஓய்வு வேண்டுமென்று தேர்தலில் போட்டியிடாமல் இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பாஜக_வின் முக்கிய தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து […]

Categories
தேசிய செய்திகள்

”டெல்லி எய்ம்ஸ்ஸில் தீ விபத்து” மும்மரமாக கட்டுப்படுத்தும் வீரர்கள் …!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு சிறப்புப் பிரிவுகள் உள்ளன. இதில் அமைச்சர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இந்த உயர் சிறப்பு  பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் மருத்துவமனையில் முதன்மை கட்டிடத்தின் முதல் தளம் , இரண்டாம் தளம் ஆகியவற்றில் தீடிரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் எழுந்த புகை மூட்டத்தால் அந்த பகுதியே புகை மண்டலமாக […]

Categories
தேசிய செய்திகள்

தங்கைகளுடன் பைக்கில் சென்ற அண்ணன்… ‘மாஞ்சா கயிறு’ அறுத்து உயிரிழந்த சோகம்..!!

டெல்லியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பைக்கில் சென்ற போது மாஞ்சா கயிறு கழுத்தில் பட்டு அறுத்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.  டெல்லியை சேர்ந்த 28 வயதான மாணவ் ஷர்மா (பொறியியல் பட்டதாரி) தனது தங்கைகளுடன் ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாட டெல்லியில் உள்ள ரோகினி பகுதிக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது வழியில் அவர்கள் மீது பட்டத்தின் மாஞ்சா கயிறு உரசியதால்  வாகனத்தை ஓட்டிய மாணவ் ஷர்மா கழுத்து அறுபட்டு உயிரிழந்தார் என்று இருந்த காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

”அருண் ஜெட்லி கவலைக்கிடம்” மிகுந்த சோகத்தில் பாஜகவினர்…!!

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 9_ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் , பெரு நிறுவன விவகார துறை அமைச்சராகவும் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்த தேர்தலில் கூட உடல்நலகுறைவு காரணமாக தனக்கு ஓய்வு வேண்டுமென்று தேர்தலில் போட்டியிடாமல் தவிரத்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பாஜக_வின் முக்கிய தலைவர்கள் நேரில் சென்று நலம் […]

Categories
தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலின் பெண்களுக்கான சிறப்பு சலுகை..!!!

73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு சலுகையை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.   இந்திய நாட்டின் 73 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் மக்களிடையே உரையாற்றும் போது சுதந்திர தினம் மற்றும் “ரக்‌ஷா பந்தன்” தினமான இன்று, எனது சகோதரிகளுக்கு நான் பரிசு ஒன்றை வழங்க போவதாக கூறினார். இதில் வருகிற அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி முதல் டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும், மாதக் கட்டணம் செலுத்தும் முறையில் […]

Categories
தேசிய செய்திகள்

“AUG_15” தாக்குதல் நடத்த திட்டம்… நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு..!!

சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்தியா முழுவதும் உச்சகட்ட பாதுக்காப்பு ஏற்படு செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் 73 ஆவது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொட ர்ந்து  தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து டெல்லி செங்கோட்டையில் குண்டு […]

Categories
தேசிய செய்திகள்

73-வது சுதந்திர தினம் “பிரதமர் மோடி தேசிய கொடியேற்றுகிறார்” செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு..!!

டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நாளை (ஆகஸ்ட்15) 73- ஆவது சுதந்திரதின விழா கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற தேசிய பாதுகாப்பு படையினரும் மற்றும் கமாண்டோ படையினரும் செங்கோட்டையை சுற்றி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

“புறப்பட தயாரான இண்டிகோ விமானம்” கண்டுபிடித்த விமானி…. தப்பிய நிதின் கட்கரி..!!

மகாராஷ்டிராவில் புறப்பட தயாரான நிலையில் இருந்த விமானத்தின் கோளாறை விமானி  கண்டுபிடித்ததால் நிதின் கட்கரி உட்பட ஏராளமான பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர்.   மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து டெல்லிக்கு 6E  636 என்ற எண் கொண்ட இன்டிகோ விமானம் புறப்பட இருந்தது. இதில்  மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உட்பட ஏராளமான பயணிகள் இருந்தனர். விமானம் ரன்- வேக்கு  (Run- way) சென்று பறக்க தயாராக இருந்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்…. டெல்லியில் காரில் வைத்து உஸ்பெகிஸ்தான் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்..!!

டெல்லியில் உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் 2 வருடத்திற்கு முன்பே டெல்லி வந்து, தனது நாட்டை சேர்ந்த பெண் ஒருவருடன் அறையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன் குர்கானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிமுகமாகி, நட்புடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதியன்று அப்பெண்ணுக்கு போன் செய்து அந்த இளைஞர்  தெற்கு டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

”அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி” கவலையில் பாஜகவினர் ..!!

உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டுள்ளது பாஜகவினரை கவலையடைய வைத்துள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் , பெரு நிறுவன விவகார துறை அமைச்சராகவும் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்த தேர்தலில் கூட உடல்நல குறைவு காரணமாக தனக்கு ஓய்வு வேண்டுமென்று தேர்தலில் போட்டியிடாமல் தவிரத்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த காலத்தில் கூட […]

Categories
தேசிய செய்திகள்

சுஷ்மா சுவராஜ் இறப்பு ”இரண்டு நாள் தூக்கம் அனுசரிப்பு” டெல்லி அரசு அறிவிப்பு …!!

சுஷ்மா சுவராஜ் இறப்பை இரண்டு நாட்கள் அரசு சார்பில் அனுசரிக்கப்படு மென்றுக்கு டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் , பாஜகவின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.இதனால் பாஜக_வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.1998_ஆம் ஆண்டு டெல்லி முதல்வராக பணியாற்றிய அவரின் இறப்புக்கு குடியரசுத்தலைவர் , துணை குடியரசுத்தலைவர் , பிரதமர் , மத்திய அமைச்சர்கள் , காங்கிரஸ் கட்சியை தலைவர்கள் இரங்கலை தெரிவித்தனர். உள்துறை அமைச்சராக இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே வருடம் …. 3 முதல்வர்கள்… இழந்து தவிக்கும் டெல்லி….!!

சுஷ்மா சுவராஜ் மறைவையடுத்து டெல்லி மாநிலம் ஒரு வருடத்தில் 3 முதல்வர்களை இழந்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் , பாஜகவின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.இதனால் பாஜக_வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.1998_ஆம் ஆண்டு டெல்லி முதல்வராக பணியாற்றிய அவரின் மரணத்தை தொடர்ந்து ஒரு வருடத்தில் 3 முதலமைச்சர்களை இழந்து டெல்லி தவிக்கின்றது. இதற்க்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபரில் 1993-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை டெல்லி மாநிலத்தின் முதலைவராக இருந்த மதன் […]

Categories
தேசிய செய்திகள்

உயிரிழப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு சுஷ்மா ட்வீட் …!!

மத்திய முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உயிரிழப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு ட்வீட் பதிவிட்டுள்ளார். மத்திய அமைச்சராக இருந்தபோது பொது மக்களுக்கு உதவ ட்விட்டரை பயன்படுத்திய சுஷ்மா உயிரிழப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து செயல்பட்டதற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். தன் வாழ்க்கையில் இந்தத்தருணத்துக்காக இத்தனை நாட்கள் காத்திருந்ததாகவும் சுஷ்மா கூறியுள்ளார். வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக பல முறைகளை பயன்படுத்தி சுஷ்மா தனது இறுதி கருத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

”சுஷ்மா சுவராஜின் இறுதிச் சடங்கு” பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுமென்று அறிவிப்பு…!!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுமென்று பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் திடீர் மறைவுச் செய்தியை அறிந்த பா.ஜ.க தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குவிந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சுஷ்மா சுவராஜின்வின் உடலுக்கு பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா , மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான் மற்றும்  உள்ளிட்ட முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்தார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா..!!

கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்  சமீபத்தில் கர்நாடக சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்து தோல்வியடைந்ததையடுத்து பெரும்பான்மையுடன் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில்  மேகதாது அணை சம்பந்தம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கர்நாடக முதல்வராக பதவியேற்ற பின் எடியூரப்பா […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து” 6 பேர் பலி… 11 பேர் படுகாயம்..!!

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.  டெல்லியில் உள்ள ஜாகீர் நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி நீண்ட நேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த பயங்கர தீவிபத்தில் 6 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். தீக்காயங்களுடன் படுகாயமடைந்தவர்களை தீயணைப்பு […]

Categories
தேசிய செய்திகள் வைரல்

விரட்டைய சாராய கும்பல் ”சுட்டபடி ஓடிய போலீஸ்” வைரலாகும் வீடியோ ….!!

டெல்லியில் வானில் துப்பாக்கியால் சுட்டபடி கள்ள சாராய கும்பலிடம் இருந்து போலீஸ் தப்பிய வீடியோ வைரலாகி வருகின்றது. புதுடெல்லியின் காலிண்டி கஞ்ச் என்ற பகுதியில் உள்ள ஜே.ஜே. காலனியில் கள்ள சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து ராமகிருஷ்ணன் என்ற போலீஸ் அதிகாரி பகுதிக்கு நேரடியாக ரோந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்குள்ள வீடு ஒன்றின் முன்னால் நின்று கொண்டு விசாரணை மேற்கொண்டார்.அப்போது அங்குள்ள 2 பேர் போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி அங்குள்ளவர்கள் போலீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

2 நாளில் 500 தடவை ”சன்னி லியோனுடன் ” கதறிய வாலிபர்கள் …!!

சன்னி லியோனுடன் பேச வேண்டுமென்று இரண்டு நாட்களில் 500க்கும் மேற்பட்ட தவறான அழைப்பு வந்துள்ளதாக டெல்லி வாலிபர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். டெல்லியை சேர்ந்த புனித் அகர்வால் என்ற 26 வயதான வாலிபர் சிறிய வணிகத்தை நடத்திக் கொண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார்.  இவர் நேற்று மயூரா என்க்லேவ் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கு ஓய்வு கிடைக்காத அளவுக்கு என்னுடைய  மொபைல் எண்ணுக்கு தேவையற்ற அழைப்புகள் வருகின்றது.கடந்த 2 நாட்களில் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

“1 ஆண்டுக்கு” பின் குறைந்த காற்று மாசுபாடு…. தூய காற்றால் புத்துணர்ச்சியடைந்த டெல்லி மக்கள்..!!

டெல்லியில் சரியாக ஓராண்டுக்கு பின்னர் காற்று மாசுபாடு குறைந்து சற்று தூய்மையான காற்று வீசுவதாக சுற்றுசூழல்துறை தெரிவித்துள்ளது.  இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு அளவு கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காற்று மாசுபாடு குறித்த தர அட்டவணையில் பூஜ்யத்திலிருந்து 500 புள்ளிகள் வரை, மிக தீவிரம்,  மோசம், திருப்திகரம், தூய்மை என பல்வேறு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் டெல்லியில் கடந்த 24ம் தேதி 164 ஆக இருந்த காற்று மாசுபாடு புள்ளிகள் கடந்த 25ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலைக்காக திருமாவளவன் இன்று அமித்ஷாவை சந்திக்கிறார்..!!  

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசயிருக்கிறார்.   முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து  தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் இன்று வரையில் எந்த முடிவும் […]

Categories
தேசிய செய்திகள்

“பிறந்த நாள் கொண்டாட சென்ற பெண்” துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் கைது..!!

டெல்லியில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வீட்டுக்கு  சென்ற 22 வயது பெண்ணை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.  டெல்லியை சேர்ந்த 22 வயதுடைய  பெண் ஒருவர் நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே அங்கு சில  நண்பர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் அங்குள்ள சவான் என்ற இளைஞர் அப்பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு அங்குள்ள சிலரும் உதவியுள்ளனர். இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

“விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் ஏற்க மாட்டோம்” முதல்வர் நாராயணசாமி..!!

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் ஏற்க மாட்டோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்  புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடங்கி  வைத்தார். அப்போது அவர் பேசுகையில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்திக்க உள்ளதாக கூறினார். மேலும் புதுச்சேரியில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் […]

Categories
மாநில செய்திகள்

கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளராக தேர்வான டி.ராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வான டி.ராஜாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்  இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்து, தனக்கு பதிலாக டி. ராஜாவின் பெயரை பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் டி. ராஜா அகில இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக, ஆர்.எஸ்.எஸ் சேர்ந்து “இந்துத்துவா நாடாக மாற்ற முயற்சி” பொதுச் செயலாளர் து.ராஜா குற்றச்சாட்டு..!!

பாஜக, ஆர்.எஸ்.எஸ் சேர்ந்து “இந்துத்துவா நாடாக மாற்ற முயற்சி செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து. ராஜா தெரிவித்துள்ளார்.   இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக இருக்கும் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்து, தனக்கு பதிலாக து. ராஜாவின் பெயரை பொதுச் செயலாளராக பரிந்துரை செய்தார். இதையடுத்து டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த பினோய் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளராக து.ராஜா அதிகாரபூர்வமாக தேர்வு..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக து.ராஜா அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்  தற்போது இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக இருக்கும் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் தனக்கு பதிலாக து. ராஜாவின் பெயரை பொதுச் செயலாளராக பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த பினோய் விஷ்வம், அக்கட்சியின் மூத்த தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் “அன்பு மகள் ஷீலா தீட்சித்” உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்த ராகுல்..!!

3 முறை முதல்வராக தன்னலமின்றி  ஷீலா தீட்சித் பணியாற்றியுள்ளார் என்று  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்  1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் காங்கிரஸ் ஆட்சியில்  முதலமைச்சராக பதவி வகித்தவர் 81- வயதான ஷீலா தீட்சித் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரான இவர் காங்கிரஸ் கட்சிக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். டிசம்பர் 2013-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஷீலா தீட்சித்  ஆம் ஆத்மி […]

Categories
தேசிய செய்திகள்

”கட்சி தாண்டி மதிக்கதக்கவர் ஷீலா தீட்சித்” ராஜ்நாத் சிங் இரங்கல் ….!!

டெல்லி முன்னாள் முதல்வர்  ஷீலா தீட்சித் மரணத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். 1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் காங்கிரஸ் ஆட்சியில்  முதலமைச்சராக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில கமிட்டியின் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் 2014_ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கேரள மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்தார். 81 வயதான இவர் இன்று காலை தீடிரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை  பலனின்றி […]

Categories
தேசிய செய்திகள்

”முன்னாள் முதல்வர்  ஷீலா தீட்சித் மரணம்” மோடி இரங்கல் …!!

டெல்லி முன்னாள் முதல்வர்  ஷீலா தீட்சித் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் காங்கிரஸ் ஆட்சியில்  முதலமைச்சராக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித் ஆவார். 81 வயதான இவர் காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில கமிட்டியின் தலைவராக இருந்தார்.  இன்று உடல்நலக்குறைவால் ஷீலா தீட்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஷீலா தீட்சித் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்வீட்_டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் […]

Categories
தேசிய செய்திகள்

” டெல்லி முன்னாள் முதல்வர் மரணம் ” கட்சியினர் அதிர்ச்சி …!!

டெல்லியில் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்த , காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் காங்கிரஸ் ஆட்சியில்  முதலமைச்சராக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித் ஆவார். 81 வயதான இவர் 2014_ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கேரள மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த இவர் காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில கமிட்டியின் தலைவராக இருந்தார். சமீபத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக து.ராஜா தேர்வு..!!

அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளராக து.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக இருக்கும் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளார். இதையடுத்து அவர் தனக்கு பதிலாக து. ராஜாவின் பெயரை பொதுச் செயலாளராக பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் நேற்று நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது பற்றி பேசப்பட்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த பினோய் விஷ்வம், அக்கட்சியின் மூத்த […]

Categories
தேசிய செய்திகள்

“விமானம் கடத்தப்பட்டது” அதிகாரிகளை பதற வைத்த விமானி..!!

விமானம் கடத்தப்பட்டது விட்டது என்று தவறாக தகவல் அனுப்பியதால் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.  டெல்லியில் இருந்து காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு கடந்த 8-ம் தேதி ஏர் ஏசியா விமானம் புறப்பட்டு சென்றது. அப்போது வழியில் என்ஜினில் சிறிய பழுது ஏற்பட்ட நிலையில் தகவலை  தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிக்க முயன்றார். விமானி  தகவல் அனுப்ப 7700 என்ற சமிஞ்சை கோடை அழுத்தாமல் தவறுதலாக 7500 என்ற கோடினை அழுத்தினார். இந்த கோடானது விமானம் கடத்தப்பட்டு விட்டது என்பதை […]

Categories
மாநில செய்திகள் வைரல்

“குடிபோதை”போக்குவரத்து காவலரிடம் தகாத செயலில் ஈடுபட்ட பெண்… சமூக வலைதளத்த்தில் வைரலாகும் வீடியோ..!!

டெல்லியில் குடிபோதையில் போக்குவரத்து காவலரிடம் பெண் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.  டெல்லியில் ஒரு ஆணும்,பெண்ணும் நன்றாக குடித்துவிட்டு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது அவர்களை பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் மறித்து வாகன சாவியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது வாகனத்தில் இருந்து இறங்கிய பெண் போக்குவரத்து காவலர்களை தகாத வார்த்தைகள் கூறி தாக்க முயன்றுள்ளார். இதையடுத்து  வண்டியில் அமர்ந்திருந்த நபரும் தகாத வார்த்தைகளால் போக்குவரத்து […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

“கிரண்பேடிக்கு பின்னடைவு”அதிகாரம் தொடர்பான வழக்கு தள்ளுபடி..!!

துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பாக கிரண்பேடி உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கை மற்றும் உத்தரவுகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி செயல்படுவதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென  MLA லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆய்வுகள் நடத்துவது, உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.மேலும்  இச்செயல்கள்  மாநில அரசின் அதிகாரங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம் …!!

மத்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா_வின் காவேரியில் இருந்து தமிழகம் , புதுவை , கேரளா ஆகிய மாநிலங்களுக்கு உரிய காவிரி நீரை வழங்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று , சம்மபந்தப்பட்ட மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்தது மத்திய அரசு. இந்த குழுவின் தலைவராக  மசூத் ஹூசைன் இருந்து வந்தார்.இந்நிலையில் மசூத் ஹூசைன் பதவிக்காலம் சென்ற ஜூன் 30_ஆம் தேதியுடன் முடிவடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

தீர்ப்பை மதிக்கமாட்டீர்களா??…கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் ..!!

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி வாகனம் நிறுத்துமிடம் கட்டுவதற்கு கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை அருகே வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு கேரள அரசு முயற்சி எடுத்தது. இதற்கு எதிராக அப்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தையடுத்து  தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்ட தீர்ப்பில் வாகன நிறுத்தம் கட்ட தடை ஏதும் இல்லை என தெரிவித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் வெற்றி “குஜராத் முதல் டெல்லி வரை” சைக்கிளின் சென்று வாழ்த்திய பாஜக தொண்டர்…!!

தனி பெரும்பான்மையுடன் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாட குஜராத்தில் இருந்து டெல்லிக்கு பாஜக தொண்டர் சைக்கிளில் வந்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. இதனை பாஜக தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.தற்போது புதிய மக்களவை பதவி ஏற்று மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் குஜராத்_தில் இருந்து டெல்லி_க்கு சைக்கிளில் வந்து வெற்றி பெற்ற பாஜகவினருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அருண்குமார் சின்கா நியமனம்…!!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவராக  அருண்குமார் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகா_வின் காவேரியில் இருந்து தமிழகம் , புதுவை , கேரளா ஆகிய மாநிலங்களுக்கு உரிய காவிரி நீரை வழங்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று , சம்மபந்தப்பட்ட மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்தது மத்திய அரசு. இந்த குழுவின் தலைவராக  மசூத் ஹூசைன் இருந்து வந்தார். இந்நிலையில் மசூத் ஹூசைன் பதவிக்காலம் சென்ற ஜூன் 30_ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

மதன்லால் சைனி உடலுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இறுதி அஞ்சலி..!!

நேற்று காலமான ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன்லால் சைனி உடலுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உட்பட  பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.  ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன்லால் சைனி (வயது 75) கடந்த சில நாட்களாகவே உடல்நலம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு ரத்தம் சார்ந்த பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.   […]

Categories
தேசிய செய்திகள்

”பெண் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கி சூடு” டெல்லியில் பரபரப்பு …!!

டெல்லியில் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர் மிதாலி சந்தோலா நொய்டாவை சேர்ந்த செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வருகின்றார். இவர் நேற்று தந்து வேலையை முடித்துவிட்டு காரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள அசோக் நகரில்  கார் சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்மநபர்கள் கும்பல் வழிமறித்து , காரின் மீது முட்டைகளை வீசியது. மேலும் கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில்  பத்திரிக்கையாளர் மிதாலியின் வலது கையில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து குண்டு பாய்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக எங்களின் எதிரி கட்சி” அமைச்சர் ஜெயக்குமார் விளாசல் …!!

திமுக எதிரி கட்சி என்று டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள நிதி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தமிழகம் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்துக்கு GST நிலுவை தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

GST நிலுவை தொகை ரூ 386 கோடியை கொடுங்கள்….. அமைச்சர் வலியுறுத்தல் …!!

தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நிலுவை மற்றும் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். 35_ஆவது  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. புதிதாக தேர்வாகியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து  மாநில நிதியமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் , 69 பொருளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தமிழகம் சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

விவசாய தொழிலாளர்களையும் “ரூ.6000 உதவித்தொகை” திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்- ஓபிஎஸ் பேட்டி..!!

நிதியமைச்சர்கள் கூட்டத்தில், விவசாய தொழிலாளர்களையும் ரூ.6000 உதவித்தொகை திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியுள்ளோம் என  ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.   பாரதிய ஜனதா இரண்டாவது முறையாக பொறுப்பெற்ற பின் தனது நிதி நிலையறிக்கையை வரும் ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்கிறது. நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்வது குறித்து பல்வேறு அமைச்சக செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தி நிதி நிலையறிக்கையை தயார் செய்து வருகிறார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வறட்சி “ரூ.1000 கோடி நிதி” ஒதுக்க வேண்டும் – துணை முதல்வர் ஓ.பி.எஸ்…!!

நிதியமைச்சர்கள் கூட்டத்தில் தமிழகத்தின் வறட்சியை சமாளிக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.   பாரதிய ஜனதா இரண்டாவது முறையாக பொறுப்பெற்ற பின் தனது நிதி நிலையறிக்கையை வரும் ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்வது குறித்து பல்வேறு அமைச்சக செயலாளர்களிடம் ஆலோசித்து, நிதி நிலையறிக்கையை தயார் செய்து வருகிறார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்வதற்கு முன்னதாக […]

Categories
தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் கூட்டம்..!!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.  பாரதிய ஜனதா இரண்டாவது முறையாக பொறுப்பெற்ற பின் தனது நிதி நிலையறிக்கையை வரும் ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்வது குறித்து பல்வேறு அமைச்சக செயலாளர்களிடம் ஆலோசித்து, நிதி நிலையறிக்கையை தயார் செய்து வருகிறார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தொடங்கியது “காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்” 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்பு …!!

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. டெல்லியில் 9-ஆவது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெறுகின்றது. காவிரி ஒழுங்காற்று குழு_வின்  தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்று கடந்த ஜூன் மாதத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கர்நாடகா கடந்த செவ்வாய்க்கிழமை வரை வெறும் 1.7 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்..!!

டெல்லியில் நடைபெறும் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ்  நாளை டெல்லி செல்கிறார்.   மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின்  கருத்துகளை கேட்பது வழக்கம். அதன் படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட் தொடர்பாக நாளை மறுநாள் (21-ம் தேதி) மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்க, தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரிக்கை – முதல்வர் பழனிசாமி..!!

முதல்வர் பழனிசாமி, சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்   டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவினை வழங்கினார். அதை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை  சந்தித்து தமிழகத்திற்கான நதி நீர் […]

Categories
மாநில செய்திகள்

“கோதாவரி – காவிரி நதிநீர்” இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற கோரிக்கை – முதல்வர் பழனிசாமி..!!

டெல்லியில்முதல்வர் பழனிசாமி, கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவினை வழங்கினார். அதை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை  சந்தித்து தமிழகத்திற்கான நதி நீர் திட்டங்கள் மற்றும் மேகதாது அணை […]

Categories
தேசிய செய்திகள்

 2022-ல் “விவசாயிகளின் வருமானம்” இரட்டிப்பாகும் – பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி நிதி ஆயோக் கூட்டத்தில், 2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இது 5வது நிதி ஆயோக் கூட்டமாகும். இதில் மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணை தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்களும் அழைக்கப்பட்டனர். இதில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா […]

Categories
தேசிய செய்திகள்

2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடையும் – பிரதமர் மோடி..!!

நிதி ஆயோக் கூட்டத்தில், 2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.  பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இது 5வது நிதி ஆயோக் கூட்டமாகும். இதில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணை தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்களும் அழைக்கப்பட்டனர். […]

Categories

Tech |