Categories
தேசிய செய்திகள்

டெல்லி தீ விபத்து- ட்ரெண்டாகும் ஹாஷ்டாக் …!!

டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்த்தை தொடர்ந்து இந்தியளவில் ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. தலைநகர் டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற சந்தைப் பகுதி உள்ளது. இங்கு உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த தொழிலகத்தில் அதிகாலை 5 மணிக்கு  ஏற்பட்ட பயங்கர தீ  43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி பயங்கர தீ விபத்து -அமித் ஷா இரங்கல்….

இன்று அதிகாலையில் டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர்  குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியின் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் மக்களின் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளது.இதற்கிடையே, இன்று அதிகாலை பொழுதில் அப்பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில்  […]

Categories
தேசிய செய்திகள்

“தீ விபத்து” 30 தீயணைப்பு வண்டி இருந்தும்……. 43 பேர் பலி……. டெல்லியில் பயங்கரம்….!!

டெல்லியில் இன்று  அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  இது வரை 32 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் அனோஜ் மண்டி என்னும்  இடத்தில உள்ள அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு   ஒன்றில் இன்று  அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில்  இதுவரை 43 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அந்தத் தீயை அணைப்பதற்கு அதிகாலை முதல் தீயணைப்பு துறையினர்  முயன்று வருகின்றனர். தற்பொழுது தீயை அணைக்க 30 தீயணைப்பு வண்டிகள் ஈடுபட்டிருப்பது […]

Categories
தேசிய செய்திகள்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டப் பெண் உயிரிழப்பு..!!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றபோது தீவைத்துக் கொளுத்தப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிசிச்சைப் பெற்றுவந்த பெண் உயிரிழந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்ட பெண், கடந்த வியாழக்கிழமை அந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றம் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரண்டு நபர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கடத்திச் சென்றுள்ளனர். அதன்பின் அப்பெண்ணை உயிருடன் தீ வைத்து அவர்கள் கொளுத்தினர். பின்னர் 90 சதவிகித […]

Categories
தேசிய செய்திகள்

23 வயது இளம்பெண்ணுக்கு தீ வைப்பு……… பிழைப்பது கடினம்…… உன்னாவ்வில் சோகம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு விசாரணைக்கு ஆஜராக இருந்த இளம் பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிழைப்பதற்க்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தகவல்கள் வெளியாகியுள்ளன.  உத்திரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் 23 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வனம்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து காவல்நிலையத்தில் அவர் அளித்த புகாரை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறை அவரை நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜராகுமாறு கூறியது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சென்று கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

வானிலை காரணமாக மேலும் மோசமடையும் டெல்லி காற்று மாசு…!!

காற்றோட்டம் குறைவதால் வரும் நாட்களில் காற்று மாசு, மேலும் மோசமடையக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியிலுள்ள காற்று மாசு நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் டெல்லி காற்று மாசு குறித்துக் கவலையளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்கைமெட் வெளியிட்டுள்ள தகவலின்படி, டெல்லியில் காற்று மாசு இன்று மிக மோசமான நிலையில் இருக்கும் என்றும்; இமயமலையின் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

டெல்லி காற்று மாசு… உரிய நடவடிக்கை எடுங்க… டைட்டானிக் ஹீரோ கவலை..!

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு குறித்து, தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். 45 வயதான ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, பருவ நிலை மாற்றம் குறித்தும் வெப்ப மயமாதல் குறித்தும் தனது கருத்துகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருவார். இந்நிலையில், அவர் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ள டெல்லி காற்று மாசு குறித்த கவலைகளைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காற்று மாசு […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்றம் நோக்கி படையெடுத்த டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள்..!

400 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜே.என்.யூ. மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். பல்கலைக்கழக விடுதிக் கட்டண உயர்வைக் கண்டித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர்கள், கடந்த மூன்று வாரத்திற்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 400 விழுக்காடு உரை உயர்த்தப்பட்டிருக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

1st அஸ்வின்…. 2nd ரஹானே….. ”கேப்டன்களுக்கு குறி”… தூக்கும் டெல்லி …!!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட அஜிங்கியா ரஹானே, அடுத்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடவுள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான அடுத்த சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்தச் சூழலில் அடுத்த சீசனில் களமிறங்கும் வீரர்களின் ஏலம் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக ஐபிஎல் அணி நிர்வாகங்கள் பிற அணிகளுடன் வீரர்களை பரிமாறிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த வீரர்கள் பரிமாற்றம் நவம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா.! ”தலைநகருக்கு வந்த சோதனை”…. ரூ 300_க்கு காற்று விற்பனை …!!

டெல்லியில் காற்று மாசுபாடு மிக கடும் மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில் தூய்மையான ஆக்சிஜன் 300 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படும் அவலமும் நிகழ்கிறது. டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மிக மோசமான நிலையில் நீடித்து வருகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுவாசிக்கும் காற்றும் அங்கு விற்பனையாகி வருகிறது. டெல்லியில் சுத்தமான காற்றை OXY PURE என்ற விற்பனை மையத்தை உருவாக்கி விற்பனை செய்துவரும் அவலமும் நிகழ்கிறது. அங்குள்ள […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை சூழ்ந்திருக்கும் ‘மரண புகை’!

டெல்லியை சூழ்ந்திருக்கும் புகையால், நகரம் என்ற பட்டியிலில் இருந்து நரகத்தை நோக்கி டெல்லி பயணிப்பதுபோல் உள்ளது. அதாவது மாநகரத்திலிருந்து மரண நகரமாக மாறி வருகிறது. இந்தியாவின் தலைநகரம் உண்மையில் சுவாசிக்கப் போராடுகிறது. தீபாவளிக்குப் பிறகு டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவருக்கும் இது பொதுவான நிகழ்வாகிவிட்டது. இந்த ஆண்டு, காற்று மாசுபாட்டின் விளைவுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. நகரத்தில் காற்றின் தரம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பருவமழை காரணமாக சிறப்பாக இருப்பதாகத் தோன்றியது. ஆனால், தீபாவளி பட்டாசிலிருந்து வந்த புகை, […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: ”கருணை காட்டுங்க” வினய் சர்மா மனு …!!

 நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவரான வினய் சர்மா, தனது தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி நிர்பயா என்பவர் ஆறு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இறுதியில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அதில் ஒருவர் 16 வயதிற்குள்பட்ட சிறுவன் என்பது […]

Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர்களை காப்பாற்ற முயற்சி: பார் கவுன்சில் நோட்டீசு

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட காவல் உயர் அலுவலர்களை காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாக பார் கவுன்சில் நோட்டீசு அளித்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியின் திஸ் ஹசாரி நீதிமன்றத்துக்கு கைதிகளை ஏற்றிக் கொண்டு காவலர் வாகனம் ஒன்று கடந்த 2ஆம் தேதி வந்தது.இந்த வாகனம் மீது, வழக்குரைஞர் வாகனம் ஒன்று மோதியது. இதையடுத்து காவலர்களுக்கும், வழக்குரைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட தகராறினைத் தொடர்ந்து அந்த வழக்குரைஞரை காவலர்கள் கைது […]

Categories
தேசிய செய்திகள்

Breaking : மோடியுடன் GK வாசன் தீடீர் சந்திப்பு ….!!

முன்னாள் மத்திய அமைச்சர் GK.வாசன் பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகின்றார். முன்னாள் மத்திய அமைச்சரும் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஜி கே வாசன்  தற்போது டெல்லியில் இருக்க கூடிய பிரதமர் மோடி இல்லத்தில் பிரதமரை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார். தற்போது தான் இந்த சந்திப்பானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் , மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவையும் சந்திப்பதற்கு ஜி கே வாசன்  தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

நீதித்துறைVSகாவல்துறை ….. ”தலைநகரின் அவமானம்”….. தேசியளவில் ட்ரெண்டிங் …!!

தலைநகர் டெல்லியில் சட்டத்துறையும் , காவல்துறையும் மோதிக்கொண்டு போராட்டம் நடைபெறும் சம்பவம் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. நவம்பர் 2_ஆம் தேதி சனிக்கிழமை டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் போலீசாரும் , காவல்துறையினரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.  இதனையடுத்து போலீஸ் தடியடி நடத்தியதில் காவல்துறை மற்றும் வழக்கறிஞ்சர் மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 8-க்கும் மேற்பட்ட வழக்கறிஞ்சர்கள் தாக்குதலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வாட்சப் புரளியை நம்பாதீங்க…… சத்தியமா தமிழகத்தில் காற்று மாசு இல்லை…… பேரிடர் மேலாண்மை இயக்குனர் பேட்டி….!!

டெல்லியை போன்று தமிழகத்தில் காற்று மாசு இல்லை எனவும் தேவையற்ற வதந்திகளை நம்பி மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நீர் நிலைகளில் ஏற்படும் பேராபத்து மற்றும் பேரிடர்களின் போது செய்ய வேண்டிய மீட்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு முகாம் ஒன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வினை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசிலிருந்து தப்பிக்க… கேரட், கீரை சாப்பிடுங்கள்… மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.!! 

அபாயகரமான நிலையிலுள்ள காற்று மாசிலிருந்து தப்பிக்க மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கேரட் சாப்பிடுமாறு கூறியுள்ளார். நாட்டின் தலைநகர் டெல்லி, அதன் சுற்றுப்புறப் பகுதிகள் காற்று மாசால் பெரும் அவதிக்குள்ளாகிவருகிறது. இதன் காரணமாக டெல்லி பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளைவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகள் கோரிக்கைவிடுத்துள்ளன. இந்நிலையில்  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “கேரட் சாப்பிட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசிலிருந்து தப்பிக்கனுமா… பாட்டு கேளுங்க… பிரகாஷ் ஜவடேகர் புது ஐடியா..!!

காற்று மாசிலிருந்து தப்பிக்க மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லி, அதன் சுற்றுப்புறப் பகுதிகள் காற்று மாசால் பெரும் அவதிக்குள்ளாகிவருகிறது. இதன் காரணமாக டெல்லி பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளைவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகள் கோரிக்கைவிடுத்துள்ளன.   இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

மறுமணம் செய்து கொள்… “வற்புறுத்திய தாய்”… கம்பியால் அடித்து கொன்ற மகள்..!!

மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்திய தாயை இரும்புக் கம்பியால் அடித்து மகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஹரிநகரைச் சேர்ந்தவர் நீரு பஹா (47). இவர் மின்சார வாரியத்தில் உதவி தனி அலுவலராகப் பணியாற்றிவருகிறார். கணவரைப் பிரிந்த நீரு பஹா, தனது தாய் சந்தோஷ் பஹாவுடன் வசித்துவந்துள்ளார். கணவரைப் பிரிந்து வந்ததற்காக மகளை சந்தோஷ் பஹா தினமும் திட்டிவந்துள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும், நீரு பஹாவை மறுமணம் செய்துகொள்ளுமாறு சந்தோஷ் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… 3 தீயணைப்பு வீரர்கள் காயம்..!!

டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் நேற்றிரவு முதல் தற்போதுவரை தீ எரிந்து வரும் தீயை அணைக்க முற்பட்ட 3 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். தலைநகர் டெல்லியை அடுத்து பீராகரி பகுதியிலுள்ள தொழிற்சாலையில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்துவிழுந்தது. வேகமாகப் பரவிய தீ அருகிலுள்ள கட்டடங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வேகமாகப் பரவிவரும் இத்தீயைக் கட்டுப்படுத்த 28 தீயணைப்பு வாகனங்கள் போராடிவருகின்றனர். மேலும், தீயைக் கட்டுப்படுத்த முயன்றதில் 3 வீரர்கள் காயமடைந்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”வரலாற்றை மாற்றி எழுதிய வங்கதேசம்” இந்திய அணியுடன் முதல் வெற்றி….!!

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் வங்கதேசம் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய முதலாவது டி20 போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே கேப்டன் ரோஹித் சர்மாவின்(9) விக்கெட்டை இழந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தீபாவளியன்று 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து.!!

டெல்லியில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்ததால் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் எந்தவொரு சம்பவத்திலும் உயிரிழப்போ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர், தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளியன்றும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக நகரம் முழுவதும் இருந்து தங்களுக்கு அடிக்கடி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன என்றும், அதில் அதிகபட்சமாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லியில் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் வேலுமணி சந்திப்பு….!!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழ்நாடு அமைச்சர் வேலுமணி சந்தித்துப் பேசியுள்ளார். உள்ளாட்சித் துறை சிறப்பாக செயலாற்றியதற்காக மத்திய அரசு தமிழ்நாட்டை கவுரவிக்கும் விதத்தில் விருது வழங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது. அவ்விருதைப் பெற தான் டெல்லி செல்லவுள்ளதாக நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்திருந்தார். இதன்படி, விருதினைப் பெற சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை […]

Categories
தேசிய செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்க உள்ளார் எனத்தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார். நாக்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் இயற்பெயர் சரத் அரவிந்த் பாப்டே என்பதாகும். இவரை தலைமை நீதிபதியாக்க தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

வேகமாக சென்றேனா ? ”ரூ 1,50,000 அபராதம்” வாக்குவததால் திரும்ப கிடைக்கும் பணம் …!!

விதிமுறைகளை மீறியதாக வாகன வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் அபராதத்தை திரும்பபெற டெல்லி போக்குவரத்துப் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். டெல்லியில் நெடுஞ்சாலையில் 60 கிலோமீட்டர் என்று நினைக்க பட்ட வேகத்தைவிட தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் சென்றதாக வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலையில் பொதுப்பணித்துறை வைத்துள்ள அறிவிப்பு பலகையில் அதிகபட்ச வேகம் 70 கிலோமீட்டர் என்று குறிப்பிடப்பட்டிருந்தாக அபராதம் விதிக்கப் பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். விதிமுறை ஏதும் இல்லாத நிலையில் தங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

“பிரபல வங்கியில் முறைகேடு” 21,000 போலி கணக்குகள்…… ரூ4,350 கோடி பணம் மோசடி….!!

பிஎம்சி வங்கி முறைகேட்டில் கைதான வங்கியின் முன்னாள் தலைவர் வரியம் சிங்கிடம்  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட பிஎம்சி வங்கியில் சுமார் 21,000 போலி கணக்குகள் மூலம் ரூபாய் 4350 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இது தொடர்பாக மும்பை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். அதில்  பிஎம்சி வங்கியின் முன்னாள் தலைவர் வாரியம் சிங் அமிர்தசரசில் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர விடுதி ஒன்றை வாங்கி […]

Categories
தேசிய செய்திகள்

22 ஆண்டு கால போராட்டம்…. விவாகரத்தில் வெற்றி…. உறவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்….!!

22 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு மரணிக்கும் நிலைக்கும் சென்றுவிட்ட திருமண வாழ்க்கையில் சிக்கிய ஒருவருக்கு விவாகரத்து வழங்கி திருமணத்தை ரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்து திருமண சட்டம் மற்றும் சிறப்புத் திருமண சட்டத்தின் படி திருமண உறவு முறிவு விவாகரத்துக்கான காரணமாக ஏற்கப்படுவதில்லை. ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் 20 வருடங்களாக பல்வேறு நீதிமன்றங்களில் விவாகரத்து கோரிய நிலையில் அவரது மனைவி உடன்படாததால் விவாகரத்து மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது மேல்முறையீட்டு வழக்கை […]

Categories
தேசிய செய்திகள்

“என்னுடைய கணவர் ஒரு விஞ்ஞானி”… அப்படியா… மனைவிக்கு நேர்ந்த ஷாக் ..!!

டெல்லியில் ஒரு இளைஞர் விஞ்ஞானி என்று கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிந்த  ஆராய்ச்சி மாணவி அதிர்ச்சியடைந்தார்.  டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு  ஜிதேந்தர் சிங் என்ற இளைஞர் ஒருவர்  அறிமுகமானார்.  இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கத்தின் போது மாணவியிடம் தான் ஒரு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டிஆர்டிஓ) விஞ்ஞானியாக இருப்பதாக தெரிவித்தார். இதை நம்பிய  அந்த  மாணவி அவரை காதலிக்க ஆரம்பித்து விட்டார்.  மேலும் போலியான அடையாள […]

Categories
தேசிய செய்திகள்

“ஐ.நாவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது”….130 கோடி இந்தியர்கள் தான் காரணம்… பிரதமர் மோடி பெருமிதம்..!!

ஐநாவில் இந்தியா மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதற்கு 130 கோடி இந்தியர்கள் தான் காரணம் என்று டெல்லியில் பிரதமர் மோடி  பெருமையுடன் பேசினார்.   பிரதமர் மோடி நேற்று  அமெரிக்காவின் வாஷிங்டனில் ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றினார். அப்போது அவர்,  தமிழ் கவிஞர்  கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி புகழ்ந்து பிரதமர் மோடி பேசினார். மேலும் இந்தியா கொண்டு வந்த திட்டத்தையும் புகழ்ந்து கூறினார். பல கருத்துக்களையும் பேசினார். ஆனால் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரம் […]

Categories
தேசிய செய்திகள்

554 KM…. வெறும் 6.15 நிமிடம்.. தேஜாஸ் எக்ஸ்பிரஸ்… அக்டோபர் 4 முதல் தனியார் சேவை ..!!

தனியார் துறை கீழ் செயல்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் 554 கிலோ மீட்டர் துரைத்தை வெறும் 6.15 மணி நேரத்தில் கடக்கின்றது. மத்திய அரசின் கீழ் இயங்கும் ரெயில்வேதுறையில் தனியார் மையத்தை புகுத்தும் வகையில் கடந்த மத்திய பட்ஜெட்டில் இந்திய ரயில்களை தனியாரிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது.இதன் ஒருபகுதியாக இந்த சேவையை நாட்டில் முதல்முறையாக உத்திர பிரதேச மாநிலத்தில் அக்டோபர் மாதம் 4_ஆம் தேதி இந்த சேவையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்க இருக்கிறார்.தனியார் சார்பில் இயக்கும் ‘தேஜாஸ் எக்ஸ்பிரஸ்’என்று பெயர் […]

Categories
திருச்சி தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”கத்தி பட பாணியில் தப்பிய கைதி” தீரன் பட பாணியில் பிடித்த போலீஸ்…!!

கத்தி பட பாணியில் தப்பிய நைஜீரிய கைதியை தீரன் பட பாணியில் தமிழக போலீஸ் கைது செய்தது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கத்தி படத்தில் விஜய் சிறையில் இருந்து தப்பிப்பது போல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நைஜீரிய குற்றவாளி ஒருவர் தப்பினார். சிறை மற்றும் சிறைக்கு வெளியே உள்ள எந்த கண்காணிப்பு கேமராவிலும் சிக்காமல் தப்பிய அவரை தமிழக போலீசார் தீரன் பட பாணியில் கைது செய்தனர்.திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் […]

Categories
தேசிய செய்திகள்

3,10,00,000 பேர் கஞ்சா அடிமைகள்….. இடம் பிடித்த 2 இந்திய நகரம்… ஆய்வில் அதிர்ச்சி…!!

உலக அளவில் கஞ்சா பயன்படுத்துவதில் இந்தியாவின் இரண்டு நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் நடத்தப்பட்ட கஞ்சா குறித்த ஆய்வில் இந்தியா_வின் இரண்டு முக்கிய நகரங்களை 10 இடங்களுக்குள் இருக்கின்றது என்று தெரியவந்துள்ளது. ஒரே ஆண்டில் 77.4 டன் கஞ்சா பயன்படுத்திய நியூயார்க் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானின் கராச்சி உள்ளதாகவும் இங்கு 42 டன் கஞ்சா பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்த டெல்லியில் கடந்த ஆண்டு மட்டும் 39 […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி ஏர்போர்ட்டில்…. “நடிகர் சூர்யா போல வேடமிட்ட இளைஞர்”…. நியூயார்க் செல்ல முயன்று சிக்கினார்..!!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வயதான வேடமிட்டு நியூயார்க் செல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதன்படி  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அம்ரிக்சிங்  என்ற நபர் வீல்சேரில் அங்கு வந்தார். வெள்ளை தாடி, தலையில் தலைப்பாகை மற்றும் கண்ணாடி உடன் காட்சி அளித்துள்ளார். தனக்கு 81 வயது என்றும் விமான நிலைய அதிகாரிகளிடம்  நடக்க முடியாது என்று கூறி விமான நிலையத்துக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து… பெண் உட்பட 2 பேர் பலி..!!

டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.  டெல்லியின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் சிலம்புரில்  4 மாடி கட்டிடம் ஒன்று  கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்காக ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். நிகழ்ச்சி நடைபெறும் போது திடீரென கண் இமைக்கும் நொடியில் கட்டிடம்  இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதையடுத்து தீயணைப்பு துறையினர்  மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட அவர்கள் ஹீனா என்ற […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் மைதானம் ”அருண் ஜெட்லி” பெயருக்கு மாற்றம்…!!

டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் ‘அருண் ஜெட்லி’ மைதானம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 9-ம்  தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24-ஆம் தேதி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து 25_ஆம் தேதி இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத்  மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வெளிநாட்டு பயணத்தில் இருந்த பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

”அருண்ஜெட்லி வீட்டில் மோடி” குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்…!!

அருண்ஜெட்லி மறைவில் கலந்து கொள்ள முடியாததால் பிரதமர் மோடி அருண் ஜெட்லி வீட்டிற்கு சென்று குடும்பத்தருக்கு ஆறுதல் கூறினார். பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 9-ம்  தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத்  மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பாஜக மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

பைக்கில் செல்லும் போது விபரீதம்… 4½ வயது குழந்தை மாஞ்சா நூல் அறுபட்டு உயிரிழப்பு…!!

டெல்லியில் 4½ வயதான குழந்தை தனது அப்பாவுடன் பைக்கில் செல்லும்போது கழுத்தில் மாஞ்சா நூல் அறுபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.   டெல்லியின் சோனியா விஹாரை சேர்ந்த கிரிஷ்குமார் என்பவர் தனது 4½ வயதான குழந்தை இஷிகாவுடன் ஜமுனா பஜாரில் இருக்கும் அனுமன் கோவிலுக்கு  பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பைக்கின்  முன் பகுதியில் அமர்ந்திருந்த குழந்தை இஷிகாவின் கழுத்தை, எதிர்பாரத விதமாக காற்றில் வேகமாக பறந்து வந்த மாஞ்சா நூல் ஒன்று சட்டென்று அறுத்துள்ளது. இதையடுத்து பதறிப்போன கிரிஷ்குமார் கழுத்தில் அறுபட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்த தன் குழந்தையை அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

அருண் ஜெட்லி உடல் டெல்லி நிகாம் போத் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது..!! 

மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் உள்ள நிகாம் போத் காட்டில்  தகனம்  செய்யப்படது.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி (வயது 66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிற்பகல் சிகிச்சை  பலனின்றி காலமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி ட்விட்டரில், […]

Categories
அரசியல் கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

ஜிஎஸ்டி நாயகன்….”அருண் ஜெட்லி” ( 1952-2019) வரலாறு….!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அருண் ஜெட்லி 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி டெல்லியில் பிறந்தார்.இவரின் தந்தை மகாராஜ் கிஷன் ஜெட்லி தாய் ரத்தினம் பிரபாத் ஜெட்லி.இவர் தமது இளமைக் கல்வியை டெல்லியில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பயின்றார்.இளங்கலை மற்றும் சட்டம் படித்த ஜெட்லி டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதும் மாணவர் தலைவராக இருந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து போராடியதால் […]

Categories
தேசிய செய்திகள்

“ஜெட்லியின் மறைவு  எனக்கு தனிப்பட்ட பெரும் இழப்பு” மத்திய அமைச்சர் அமித்ஷா உருக்கத்துடன் இரங்கல்..!!

ஜெட்லியின் மறைவு  எனக்கு தனிப்பட்ட பெரும் இழப்பு என்று மத்திய அமைச்சர் அமித்ஷா உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி (வயது 66) கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட போட்டியிடாமல் அரசிலிருந்து விலகி இருந்தார். மேலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அருண் ஜெட்லிக்கு தீவிரமாக உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்..!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி இருந்தார். மேலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து கடந்த 9-ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அருண் ஜெட்லிக்கு தீவிரமாக உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். அருண் ஜெட்லி உடல்நிலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

டெல்லியில் திமுக போராட்டம்- 14 கட்சிகள் பங்கேற்பு ….!!

டெல்லியில் திமுக நடத்தும் போராட்டத்தில் 14 கூட்டணி கட்சிகள் பங்கேற்றுள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும்  லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.மேலும் அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயக படுகொலை என்று கடுமையான கண்டனம் தெரிவித்த திமுக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்த் பகுதியில் திமுக மக்களவை தலைவர் TR.பாலு தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றது. […]

Categories
அரசியல்

சிதம்பரத்தின் கைது எதிர்க்கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்… R.S.பாரதி கருத்து..!!

அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக பா சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : டெல்லியில் இன்று திமுக போராட்டம்….!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும்  லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.மேலும் அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசாங்கம் பிறப்பித்துள்ளது.காஷ்மீரில் மத்திய அரசின் விவகாரம் குறித்து கடந்த 19_ஆம் தேதி திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிரடி அறிக்கை ஒன்றை […]

Categories
தேசிய செய்திகள்

“ராஜீவ் காந்தி பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி” பிரதமர் மோடி.!!

“நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின்  பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 -ஆவது பிறந்த நாள்  இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு  காங்கிரஸ் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியின்  வீர் பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா,  […]

Categories
தேசிய செய்திகள்

ராஜிவ் காந்தி 75 -ஆவது பிறந்த நாள்…. ராகுல், சோனியா, பிரியங்கா உள்ளிட்டோர் அஞ்சலி..!!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ராகுல், சோனியா, பிரியங்கா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 -ஆவது பிறந்த நாள்  இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பிறந்த தினத்தை முன்னிட்டு  காங்கிரஸ் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியின்  வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின்  நினைவிடத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : ”டெல்லிக்கே சென்று போராட்டம்” திமுக அறிவிப்பு..!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும்  லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் வரும் 22ஆம்  டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அனைத்து கட்சி எம்பிக்களும் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தை திமுக நடத்துகின்றது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

அருண் ஜெட்லி ”இதயம் , நுரையீரல் இயங்கவில்லை” எய்ம்ஸ் வளாகம் பரபரப்பு…!!

அருண் ஜெட்லியின் இதயம் மற்றும் நுரையீரல் சரிவர இயங்கவில்லை என்று தகவல் வெளியாகியதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் வளாகம் பரபரப்பாக காணப்படுகின்றது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி இருந்தார். மேலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து கடந்த 9ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலையானது மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

 ”அருண் ஜெட்லி கவலைக்கிடம்” எக்மோ கருவி பொருத்தம் …!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருண் ஜெட்லிக்கு   எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி அருண் ஜெட்லியின்  உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து  கடந்த 9ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலையானது மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றது. தொடர்ச்சியாக அருண் ஜெட்லிக்கு தீவிரமாக உயிர் காக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ”எய்ம்ஸ் வருகின்றார் மோடி”அருண் ஜெட்லிக்கு என்ன ஆச்சு..?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருண் ஜெட்லியை நலம் விசாரிக்க பிரதமர் மோடி வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி அருண் ஜெட்லியின்  உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து  கடந்த 9ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலையானது மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றது. தொடர்ச்சியாக அருண் ஜெட்லிக்கு தீவிரமாக […]

Categories

Tech |