Categories
டெக்னாலஜி பல்சுவை

36,000,00,00 பேர்…. தொடுடா..! பாக்கலாம்…. யாராலும் நெருங்க முடியாத உயரத்தில் ஜியோ …!!

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் 36.9 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிராய் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: வோடபோன் ஐடியா நிறுவனம் 33.62 கோடி வாடிக்கையாளர்களையும் பாரதி ஏர்டெல் 32.73 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளன. அக்டோபர் மாதம் 120.48 கோடியாக இருந்த மொத்த தொலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நவம்பர் மாதம் 2.4 விழுக்காடு குறைந்து 117.58 கோடியாக உள்ளது. ஒட்டுமொத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒதுக்கப்படும் சஞ்சு சாம்சன்: பந்திற்கு பதிலாகப் பரத் தேர்வு!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியதையடுத்து, அவருக்குப் பதிலாக கே.எஸ். பரத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின்போது இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டாவது போட்டியிலிருந்து ரிஷப் விலகினார். இவருக்குப் பதிலாக இந்திய அணிக்கு கே.எஸ். பரத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ரசிகர்கள் சஞ்சு சாம்சன் தேர்வுசெய்யப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், பரத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

உன்னாவ் பாலியல் வழக்கு: குற்றவாளியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!!

உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள குல்தீப் செங்காரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் அபராதத் தொகையை 2 மாதத்தில் கட்டவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தண்டனை பெற்ற குல்தீப் செங்காரின் மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் வசித்த சிறுமியை, அப்போதைய பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ந் தேதி தொடங்குகிறது

ஆண்டின் முதலாவது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 31-ந் தேதி தொடங்குகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி தொடங்கும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  இது, இந்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் ஆகும். எனவே, மரபுப்படி, கூட்டத்தொடரின் முதல் நாளில் ஜனாதிபதி உரையாற்றுகிறார். மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் அடங்கிய கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 31-ந் தேதி உரையாற்றுகிறார். மறுநாள் (பிப்ரவரி 1-ந் தேதி), 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பில் பொதுமக்கள் தவறான தகவல் அளித்தால் அபராதம்..!

மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பில் பொதுமக்கள்  தவறான தகவல் அளித்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கபடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, பதிவேடு தயாரிக்கும் பணிக்கான ஏற்பாடுகளில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு தீவிரம் காட்டி உள்ளது. இதற்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்புகளும் , போராட்டங்களும் நடக்கின்றன. ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி, செப்டம்பர் 30-ந் தேதி வரை இந்தப் பணி நடைபெறும் என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளின் தண்டனை தேதி மாற்றம்?

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நால்வரின் தூக்கு தண்டனை தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காவலர்களால் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவன் 18 வயதை பூர்த்தியடையாதவன் என்பதால் அவன் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு மூன்றே ஆண்டுகளில் வெளிவந்துவிட்டான். மற்றொருவர் சிறைக்குள்ளே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு!

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. நிர்பயா வழக்கில் உச்ச நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனையை குற்றவாளிகளுக்கு உறுதி செய்தது. இதையடுத்து குற்றவாளிகள் நான்கு பேரும், குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பினர். இந்த மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தார். இதையடுத்து குற்றவாளிகள் வினய் குமார் சர்மாவும், முகேஷ் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் கடைசி நிவாரண மனுத்தாக்கல் செய்தனர். அதனையும் நீதிமன்றம் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

BREAKING :நிர்பயா வழக்கு- 2 குற்றவாளிகளின் மறுசீராய்வு மனுக்கள்  தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் அதிரடி

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து 2 குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுக்களை  தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டபடி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது. 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் மைனர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் குப்தா, […]

Categories
தேசிய செய்திகள்

ஓயோவில் 1000 பேரின் வேலை காலி!

ஓயோ நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஓயோ நிறுனத்தின் தலைவர் ரித்தீஸ் அகர்வால், ஓயோ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மின்அஞ்சல் அனுப்பியுள்ளார். அதில், “ஓயோ நிறுவனத்தை மறுசீரமைக்கவுள்ளதால், சில ஊழியர்களை ஓயோ நிறுவனத்தைத் தாண்டி வேறு நிறுவனத்தில் வேலையில் சேரும்படி கேட்டுக்கொள்கிறோம். உண்மையைச் சொன்னால், இது எங்களுக்கு எளிதான முடிவல்ல. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி ஓயோ நிறுவனம் நகர்வதால், வேறுவழியின்றி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

ஜேஎன்யுவில் இயல்புநிலை திரும்பவில்லை – உதயநிதி ஸ்டாலின்!

ஜேஎன்யுவில் இயல்பு நிலை திரும்பவில்லை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 5ஆம் தேதி மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் தாக்கப்பட்டனர். இதற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் முதல் நாடு முழுவதும் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தாக்கப்பட்ட மாணவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். முன்னதாக அக்கட்சியின் மகளிரணி […]

Categories
தேசிய செய்திகள்

‘என் மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துவிடும்’ -நிர்பயா குற்றவாளி உருக்கம்

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் கடைசி நிவாரண மனு தாக்கல்செய்துள்ள நிர்பயா குற்றவாளி வினய் சர்மா, தன்னுடைய மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துவிடும் என உருக்கமாகக் கூறியுள்ளார். டெல்லியில் நடுநிசி இரவில் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நால்வரில் வினய் சர்மாவும் ஒருவர். இந்நிலையில் இவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் தேதி குறித்துவிட்டது. அதற்கான நீதிமன்ற கறுப்பு உத்தரவு கடந்த 7ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

பொருளாதார அறிஞர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!

பிரதமர் நரேந்திர மோடியுடன் பொருளாதார அறிஞர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடி டெல்லி நிதி ஆயோக் அலுவலத்தில் பொருளாதார அறிஞர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இந்த சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார், தலைமை செயல் அலுவலர் அமிதாப் காந்த் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பிபெக் டெத்ரோய் ஆகியோரும் உடனிருந்தனர். 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்புக்கு முன்னோட்டமாக இந்த சந்திப்பு நடந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி அச்சகத்தில் தீ விபத்து… ஒருவர் பலி..!!

டெல்லி பட்பர்கஞ்ச் தொழிற்சாலை பகுதியில் உள்ள அச்சகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கிழக்கு டெல்லியின் பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 35 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எப்படி இந்த விபத்து நிகழ்ந்தது தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

அமுல்யா பட்நாயக்கிற்கு மாற்றாக வேறு காவல் ஆணையர்.!!

ஜனவரி 31ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள டெல்லி காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக்கிற்கு மாற்றாக தேர்தல் பணிக்காக வேறு காவல் ஆணையரை நியமிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. டெல்லி மாநிலத்தில் வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் அரசு அலுவலர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோரை தேர்தல் பணிக்காக நியமனம் செய்கிறது. இந்த நிலையில், டெல்லி பெருநகர காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக் வரும் 31ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: தூக்கு தேதி அறிவிப்பு!

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. நான்கு குற்றவாளிகளையும் விரைந்து தூக்கிலிடக் கோரி நிர்பயாவின் தாயார் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்தத் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நான்கு குற்றவாளிகளும் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், “இவ்வழக்கு குறித்த எந்த மனுவும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை. குடியரசுத் தலைவருக்கு குற்றவாளிகள் அனுப்பிய கருணை மனுவும் நிலுவையில் இல்லை. மேல் […]

Categories
தேசிய செய்திகள்

பேரழிவு சேதத்திற்கு நிவாரணம்: 7 மாநிலங்களுக்கு ரூ.5,908 கோடி ஒதுக்கீடு!

உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், 7 மாநிலங்களுக்கு ரூ.5,908 கோடி நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நேற்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய அரசு கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பல்வேறு பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ரூ.5,908.56 கோடியை வழங்க ஒப்புதல் அளித்தது. அதில், அஸ்ஸாமுக்கு ரூ.616.63 கோடி, இமாச்சலப் பிரதேசத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

JUST NOW : JNU மாணவர் சங்க தலைவி மீது வழக்கு பதிவு …..!!

JNU பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் டெல்லி JNU பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியினுள் நுழைந்த கும்பல் அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கடுமையாக தாக்கினார். கொடூர ஆயுதங்களோடு நுழைந்து மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP தான் காரணம் என்று ஒரு தரப்பினரும் , இடதுசாரி மாணவர் அமைப்புதான் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கையெடுத்து கும்பிட்ட ‘அமிதாப் பச்சன்’…. வெளுத்துவாங்கும் நெட்டிசன்கள்.!!

ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரம் பற்றி கருத்து தெரிவிக்காமல் இருந்துவரும் நடிகர் அமிதாப் பச்சனை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள் மீதான தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்து-வருகின்றனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் திரையுலகினர் பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படையாகப் பதிவுசெய்து-வருகின்றனர். இதனிடையே பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாய் திறக்காமல் மவுனம் காத்துவந்த நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

ஜே.என்.யு. விவகாரம் எதிரொலி: ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், அம்மாணவர்களுக்கு ஆதரவாகவும் ஹைதராபாத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முகமூடி அணிந்து அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் இடதுசாரி மாணவ அமைப்பச் சேர்ந்த பலரும் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்து தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அம்மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், மவுலான ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம், ஒஸ்மானிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி பல்கலைக்கழகத்தைச் […]

Categories
தேசிய செய்திகள்

JNU மாணவர்களை தாக்கியது நங்கள் தான்…. இன்னும் தாக்குவோம் – கொக்கரிக்கும் இந்து அமைப்பு ..!!

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கியது தாங்கள்தான் என்று இந்து ரக்‌ஷா தல் என்ற இந்து அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் பருவநிலை (செமஸ்டர்) தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரியும், தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று அமைதிப் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையோடு வந்த முகமூடி கும்பல் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. இந்தச் சம்பவத்தில், ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ், பேராசிரியர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

ஜேஎன்யு தாக்குதல் குறித்த வழக்கு: குற்றப்பிரிவுக்கு மாற்றம்

ஜேஎன்யு தாக்குதல் குறித்த வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றி, உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. புதிய பருவநிலைத் தேர்வுக்காக ஜேஎன்யு மாணவர்கள் தங்களது விவரங்களைப் பல்கலைக்கழக இணைதளத்தில் பதிவிடுவதைத் தடுக்கும் விதமாக, ஜனவரி 3ஆம் தேதி குறிப்பிட்ட சில மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இணையதள மையத்துக்குள் புகுந்து வைஃபை கருவியைச் செயலிழக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர்களுக்கும், இன்னொரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின் அது கை கலப்பில் முடிந்துள்ளது. வைஃபை கருவிகளைச் செயலிழக்கச் […]

Categories
தேசிய செய்திகள்

‘ஜனநாயகத்தைக் கண்டு அவமானப்படுகிறேன்’ – மம்தா ஆவேசம்!

ஜனநாயகத்தைக் கண்டு அவமானப்படுகிறேன் என ஜே.என்.யு. பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம் குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து கூறியுள்ளார். இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) மாணவர்கள் நேற்று மாலை அப்பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென அங்கு வந்த முகமூடி கும்பல் ஒன்று இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையால் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. அதோடு மட்டுமில்லாமல் மாணவர்கள் விடுதிகள், வரவேற்பறைகள், வாகனங்கள் ஆகியவற்றையும் அந்தக் கும்பல் அடித்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி சட்டப் பேரவை தேர்தல் தேதியை அறிவித்தார் சுனில் அரோரா.!

டெல்லி சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.   70 தொகுதிகளை கொண்ட தலைநகர் டெல்லி பேரவையின் பதவிக்காலம் வருகின்ற பிப்ரவரி 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தநிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சுனில் அரோரா பேசியதாவது, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நான்கு கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் […]

Categories
தேசிய செய்திகள்

ஜே.என்.யூ. பல்கலைக்கழக வன்முறை… 4 பேர் கைது.!

ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) மாணவர்கள் நேற்று மாலை அப்பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென அங்கு வந்த முகமூடி கும்பல் ஒன்று இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையால் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. இதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், மாணவர்கள் விடுதிகள், வரவேற்பு அறைகள், வாகனங்கள் ஆகியவற்றையும் அந்தக் கும்பல் அடித்து உடைத்தது. இதில், […]

Categories
தேசிய செய்திகள்

ஜே.என்.யூ. தாக்குதல்: பின்புலம் என்ன?

ஜே.என்.யூ. பல்கலைக்கழக்கத்தில் மாணவர்கள் மீது முகமூடி கும்பல் நடத்திய வன்முறைத் தாக்குதலின் பின்புலம் குறித்து பார்ப்போம். டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) வளாகத்தில் பருவநிலைத் (செமஸ்டர்) தேர்வுப் பதிவை ஒத்திவைக்கக்கோரியும், தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று அமைதிப் பேரணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென முகமூடி கும்பல் ஒன்று இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையோடு வந்து அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. இந்தச் சம்பவத்தில், ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

அதிகமான வெங்காய வரத்து…. விலை குறைய வாய்ப்பு…. பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து புதிதாக வெங்காய மூட்டைகள் குவிந்துள்ளதால் டெல்லி போன்ற பெருநகரங்களில் விலை குறைய வாய்ப்புள்ளது. சமீபத்தில் வெங்காய உற்பத்தி குறைந்ததால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து  கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானது. வரத்தும் குறைவாக காணப்பட்டதால் விலை உயர்வு  இரண்டு வாரங்களாக நீடித்தது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் வெங்காய வரத்து இரு மடங்காக உயர்ந்தது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கும் அதற்கு  குறைந்தும் காணப்பட்டது. தற்பொழுது […]

Categories
தேசிய செய்திகள்

தெற்கு ஆசியாவிலையே முதல்முறை….. மெட்ரோ ரயில்களில் இலவச WI-FI….!!

தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக மெட்ரோ ரயில் சேவையில் அதிவேக இலவச வை-பை வசதி டெல்லியில்  கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையம் செல்லும் எக்ஸ்பிரஸ் லைன்  வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையில் அதிவேக இலவச வைஃபை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. வளர்ந்த நாடுகளான சீனா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் மெட்ரோ ரயில் சேவையில் இலவச வைஃபை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதிலும் தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக இலவச வைஃபை மெட்ரோ  சேவையில் அறிமுகப்படுத்திய நாடாக […]

Categories
மாநில செய்திகள்

டெல்லியில் கடும் குளிர்….. அரசு காப்பகங்களில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்….!!

டெல்லியில் நிலவும் கடும் குளிரில் இருப்பிடம் இல்லாமல் தவித்த வெளிமாநிலத்தவர்கள் அரசு  காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டனர்.  டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. நேற்று காலை 5.8 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குளிர் பதிவான நிலையில், இன்று காலை 8.10 ஆக வெப்பநிலை அதிகரித்து  பொழுதும் கடும் குளிர் தொடர்ந்து நிலவியது. டெல்லியில் கடும் குளிரால் இருப்பிடம் இல்லாமல் தவிர்த்த உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள்  அரசு […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய போர் நினைவிடத்தில் பிபின் ராவத் மரியாதை.!!

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். கார்கில் போர் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற பிறகு, முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்க கார்கில் ஆய்வுக் குழு பரிந்துரை செய்தது. இருந்தபோதிலும், பின்னர் ஆட்சி அமைத்த அரசுகள் இப்பதவியை உருவாக்காமல் இருந்தது. இதையடுத்து, மோடி தலைமையிலான பாஜக அரசு இப்பதவியை உருவாக்க முடிவெடுத்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதலும் அளித்தது. இந்நிலையில், ராணுவத் தளபதியாக இருக்கும் பிபின் ராவத்தை முப்படைகளின் […]

Categories
தேசிய செய்திகள்

உன்னாவ் விவகாரம்: நீதி கிடைத்தது எப்படி?

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இல்லாமல் இருந்தால் இந்த நாடு எவ்வளவு அழகாக இருக்கும்? ஆனால், இன்றுவரை அது ஒரு அழகான கனவாக மட்டும்தானே இருக்கிறது.   அழிந்துவரும் சமகால சமூக அறம் இந்தியாவில் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலநிலை உள்ளது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவை, சர்வதேச அளவில் தலை குனியவைத்துள்ளன. கொடியவனை நல்லவன் வீழ்த்துவதை பண்டிகைகளாகக் கொண்டாடுவது நம் இந்திய சமூகத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

சி.ஏ.ஏ. வன்முறை குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நேரமிது – அமித்ஷா

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட சிறு குழுக்களுக்கு பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது என உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். டெல்லி மேம்பாட்டு ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தொடர்பான எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்திவருகிறது. டெல்லியில் நிலவிய அமைதியான சூழ்நிலையை அவர்கள் சீர்குலைத்துவிட்டனர். சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தின்போது […]

Categories
தேசிய செய்திகள்

“உங்கள் போட்டோ மீமாக மாறுகிறது”… கூலாக பதிலளித்த மோடி..!!

ட்விட்டர் பக்கம் ஓன்று உங்கள் புகைப்படம் மீமாக மாறுகிறது என தெரிவித்ததற்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் சூரிய கிரகணம் இன்று காலை 8 மணியளில் தொடங்கி காலை 11.20 மணிக்கு முடிவடைந்தது. இந்த கிரகணத்தை பொதுமக்கள், குழந்தைகள் உட்பட  பலரும் பார்த்து ரசித்தனர். அதேநேரத்தில் ஒரு சில இடங்களில் மேக மூட்டம் காரணமாக பார்க்க முடியாத சூழ்நிலையால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேபோல தேனி, ஈரோடு, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளும் சூரிய […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“ஆர்வமாக இருந்தேன்”… ஆனால் பார்க்க முடியவில்லை… பிரதமர் மோடி ட்வீட்..!

மேக மூட்டம் காரணமாக என்னால் சூரியகிரகணத்தை பார்க்க முடியவில்லை என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார். சூரிய கிரகணம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இன்று காலை 8 மணியளில் தொடங்கி காலை 11.20 மணிக்கு முடிவடைந்தது. இந்த கிரகணத்தை பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் சிறுவர்கள் என பலரும் பார்த்து ரசித்தனர். வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது என்பதால் சோலார், சூரிய கண்ணாடி மூலம் பார்த்து கண்டுகளித்தனர். அதேநேரத்தில் ஒரு சில இடங்களில் பார்க்க […]

Categories
மாநில செய்திகள்

ரூ120,00,000 ஊழல்…… முன்னாள் முதலமைச்சர்கள் கைவரிசை…… 19 பேர் மீது வழக்கு பதிவு….!!

டெல்லி ஆக்ரா இடையிலான யமுனா அதிவிரைவு நெடுஞ்சாலை அமைப்பதில் நடந்ததாகக் கூறப்படும் 120 கோடி ரூபாய் ஊழல் குறித்த விசாரணை சிபியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு  டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலைகளுக்கான  திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மாயாவதி துவக்கி வைத்தார். பின்னர் அவரது ஆட்சி போய் 2012ஆம் ஆண்டு சமாஜ்வாதி முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சாலையை திறந்து வைத்தார். 165 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையை  அமைக்கும் பணியில் 55 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நாளை தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி!

66ஆவது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாளை வழங்குகிறார். திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வானவர்களின் பெயர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை குஜராத்தி மொழித் திரைப்படமான ஹெல்லாரோவுக்கு அறிவிக்கப்பட்டது. அதே போன்று உரி திரைப்படத்தில் நடித்த விக்கி […]

Categories
மாநில செய்திகள்

சொன்ன படி நடந்து காட்டிய டெல்லி உயர்நீதிமன்றம்……… 125 மதுபானக்கடைகள் இன்று மூடல்…!!

டெல்லியில் மது விற்பனை செய்யும் 125 கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன. டெல்லியில் பீர் மற்றும் ஒயின் மது வகைகளை விற்பனை செய்வதற்காக மட்டும் உரிமம் பெற்ற கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் அங்கு முறைகேடுகள் நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்ட 125 மதுபானக் கடைகள் வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட 125 மது கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றது.

Categories
மாநில செய்திகள்

கண்டிப்பா வந்துருங்க… பேரணியில் பங்கேற்க கமலை நேரில் அழைத்த திமுக..!!

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்க கமலுக்கு திமுக நேரில் அழைப்பு விடுத்துள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி  ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கல்லூரி மாணவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மசோதாவுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ், […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் செல்போன் சேவை நிறுத்தம்..!!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் நிலையில், மத்திய அரசின் உத்தரவால் டெல்லியில் சில பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இப்போராட்டத்தில் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே […]

Categories
தேசிய செய்திகள்

குல்தீப் செங்கார், நிர்பயா குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்!

உன்னாவ் வழக்கு குற்றவாளி குல்தீப் செங்கார், நிர்பயா குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார். டெல்லியில் 2012ஆம் ஆண்டு ஆறு நபர்களால் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மூர்க்கமாக தாக்கப்பட்டார் நிர்பயா எனும் மருத்துவக் கல்லூரி மாணவி. இந்தக் கொடூர சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் குற்றவாளிகளில் 18 வயதுக்குக் கீழிருந்த சிறுவன் ஒருவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான். அதில் ராம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு…!!

தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் உள்ள திமுக மாணவர் அணியைச் சேர்ந்த மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாணவர்கள் இணைந்து நடத்திய போராட்டத்தில் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஆம்பூர் பேருந்து நிலையத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டங்களை எதிர்த்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் போராட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“உன்னாவ் வழக்கு” குல்தீப் செங்கார்க்கு 19 ஆம் தேதி தண்டனை….. டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு….!!

உன்னாவ் சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் பாஜக MLA  குல்தீப் செங்கார் தான் குற்றவாளி என டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.   உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ்வில் கடந்த வருடம் பாஜக MLA விடம் வேலை கேட்டு சென்ற இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பாஜகவின் எம்எல்ஏ குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றத்தை நிரூபிப்பதற்காக பல மாதங்களாக வழக்கானது  நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“மிருகமாகிய காவல்துறை” உச்சநீதிமன்றம் எதிர்கருத்தால்….. ரத்தம் சிந்திய மாணவர்கள் அதிருப்தி….!!

டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள்  நடாத்திய போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தியான கருத்தை தெரிவித்துள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக JNU  பல்கலைக்கழக மாணவர்கள், jmu பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல்வேறு மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் பயங்கரமாக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இது மனித உரிமை மீறல் என்று கூறி டெல்லி காவல்துறை உயர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் விடிய […]

Categories
தேசிய செய்திகள்

மசோதாவிற்கு எதிராக.. டெல்லியில் வன்முறை வெடித்தது…!!

டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.  டெல்லி பாரத் நகர் பகுதியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பேருந்துகள் மீது தீ வைத்து எரிக்கப்பட்டது. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பொதுமக்கள், மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுட்டனர். டெல்லியில் 3-பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களும் சேதமடைந்துள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவத்தில் மூன்று காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். கடந்த வாரம் […]

Categories
தேசிய செய்திகள்

தொடர் தீ விபத்திற்குள்ளாகும் டெல்லி…….முண்ட்கா பகுதியில் தீ விபத்து …..!!!!

தலைநகர் டெல்லியின் முண்ட்கா என்ற இடத்தில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. வடக்கு டெல்லியின் முண்ட்கா என்ற இடத்தில  இன்று அதிகாலை பொழுதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்பு கடந்த 8-ம் தேதி டெல்லி அனாஜ் மண்டி என்ற பகுதியில் உள்ள நான்கு மாடி […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் பரபரப்பு…… ”JNU மாணவர்கள் மீண்டும் போராட்டம்”….. போலீஸ் தடியடி ….!!

விடுதிக் கட்டண உயர்வை எதிர்த்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்லவிருந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். பல்கலைக்கழக விடுதிக் கட்டண உயர்வைக் கண்டித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 400 விழுக்காடு உரை உயர்த்தப்பட்டிருக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி நவம்பர் 18ஆம் தேதி பேரணியாக சென்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி அனஜ் மண்டியில் மீண்டும் தீ விபத்து..!!

டெல்லி அனஜ் மண்டியில் தீ விபத்து நடந்த கட்டடத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி அனஜ் மண்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து, அதே கட்டடத்தில் மீண்டும் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த டெல்லி தீயணைப்புத் துறையினர் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தீ விபத்து -நிர்மலா சீதாராமன் இரங்கல் …!!

டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  இரங்கல் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற சந்தைப் பகுதி உள்ளது. இங்கு உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த தொழிலகத்தில் அதிகாலை 5 மணிக்கு  ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

43 பேரை பலியாக்கிய டெல்லி தீ விபத்து -மோடி இரங்கல்

டெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்திற்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.  தலைநகர் டெல்லியின் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் மக்களின் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளது. இதற்கிடையே, இன்று அதிகாலை பொழுதில் அப்பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில்  விரைந்து சென்றனர். அதிகாலையில் நிகழ்ந்த  […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தீவிபத்து- நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ….!!

டெல்லியில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுமென்று முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற சந்தைப் பகுதி உள்ளது. இங்கு உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த தொழிலகத்தில் அதிகாலை 5 மணிக்கு  ஏற்பட்ட பயங்கர தீ  43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தீ விபத்து – ராஜ்நாத்சிங் இரங்கல் …!!

டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற சந்தைப் பகுதி உள்ளது. இங்கு உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த தொழிலகத்தில் அதிகாலை 5 மணிக்கு  ஏற்பட்ட பயங்கர தீ  43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். […]

Categories

Tech |