தஞ்சாவூர் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆற்றங்கரையை ஒட்டி 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர்மாவட்டம் ஆத்தூர் பகுதியை அடுத்த கிராம பகுதிகளில் வெண்ணாறு கரையோரம் இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கிராமத்திற்குள் மழைக்காலங்களில் ஆற்று நீர் புகுந்து செல்லும் அபாயம் ஏற்படுகிறது. பல ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக […]
