தனது குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக ஒருவர் சிறுத்தையுடன் சண்டை போட்டதால் சிறுத்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் இருக்கும் பானவரா கிராமத்தில் ராஜ கோபால் நாயக்கா என்ற மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் வசித்துவருகிறார். இவருக்கு நாயகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்கள் மகளுடன் மோட்டார் சைக்கிளில் பெண்டாகெரே நோக்கி சென்று கொண்டிருந்த போது, திடீரென இவர்களது மோட்டார் சைக்கிளின் குறுக்கே ஒரு சிறுத்தை ஓடி வந்துள்ளது. […]
