தெரு நாய்கள் கடித்து குதறியதால் படுகாயமடைந்த மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதிக்குள் மான்கள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மான் ஒன்று வழி தவறி கருமத்தம்பட்டி வினோபா நகர் பகுதிக்குள் நுழைந்து விட்டது. அப்போது தெருநாய்கள் ஒன்று சேர்ந்து மானை துரத்தி கடித்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் நாய்களை விரட்டி காயமடைந்த மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
