தமிழகத்தில் இன்று மேலும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 2.50 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. […]
