நெல் அறுவடை இயந்திர சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செல்லபிள்ளையார்குளம் மேல தெருவில் பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வயலில் நேற்றுமாலை அறுவடையான நெல் மூட்டைகளை டிராக்டரில் ஏற்றி அனுப்பி விட்டு இரண்டாவது லோடு ஏற்றுவதற்காக காத்திருந்தனர். இந்நிலையில் அறுவடை இயந்திரத்தின் பின்னால் உள்ள நிழலில் பெண் பணியாளர் ஒருவரும் பொன்னுசாமியும் உட்கார்ந்து இருந்தனர். இதனை கவனிக்காத நெல் அறுவடை இயந்திர ஓட்டுநர் டிராக்டர் வந்தவுடன் லோடு ஏற்றுவதற்காக […]
