கல்லுடைக்கும் ஆலை எந்திரத்தில் சிக்கி லாரி ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை சிவன் கோவில் தெருவில் லாரி ஓட்டுநரான தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரக்கு ஏற்றுவதற்காக அப்பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான கல் உடைக்கும் ஆலைக்கு தமிழரசன் சென்றுள்ளார். அப்போது லாரியை நிறுத்திவிட்டு தமிழரசன் ஆலையில் ஓடிக்கொண்டிருந்த எந்திரத்தின் பெல்டில் ரோலர்களுக்கு இடையே இருந்த கல் மற்றும் மண்ணை […]
