விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் திமுக பிரமுகர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள காவட்டுநாயக்கன்பட்டி-கூவலப்புரம் சாலையில் இருக்கும் கிணறு ஒன்றில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இது பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தது எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் வசிக்கும் பாலாஜி என்பது தெரியவந்துள்ளது. இவர் எல்.எல்.பி படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற பாலாஜி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் தாய் வீட்டில் இருக்கும் மனைவியை பார்க்க சென்றிருக்கலாம் […]
