தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர், சுந்தர் நகரில் தான் வசித்து வந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் நகர்ப்புறப் பகுதியான சுந்தர் நகரில் வேதாரண்யத்தைச் சேர்ந்த முரளி என்ற இளைஞர் அடுக்கு மாடிக் குடியிருப்பொன்றில் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். சிறுவாச்சூர் பகுதியிலுள்ள எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் வேலை செய்து வந்த அவர், தனது குடும்பத்திலுள்ள பிரச்னைகளை தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறி மன வேதனையில் இருந்ததாக தெரிகிறது. […]
