மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமாரலிங்கபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி பாண்டியராஜன் என்பவர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது உயிரிழந்தவரின் சடலமானது அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனை அடுத்து […]
