நடிகர் நாகேஷை அவர் வீட்டில் செல்லமாக குண்டுராவ் என்றும் குண்டப்பா என்றும் அழைத்து வந்தனர். நாகேஸ்வரன் என்ற இயற்பெயர் கொண்ட இவரின் ஒல்லியான தேகத்தை பார்த்த பிறகும்கூட குண்டப்பா என்ற பட்டப்பெயர் வைத்திருப்பதே வேடிக்கையான ஒரு உண்மைதான். தாராபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்து கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது 1951ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள் இவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்தது. வைசூரி என்னும் மிகக்கடுமையான அம்மைநோய் இவரின் முகத்தில் […]
