அமெரிக்காவிலுள்ள நைட் கிளப் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான கனெக்டிகட் தலைநகர் ஹார்ட்ஃபோர்ட் நகரிலுள்ள நைட் கிளப் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) அதிகாலை திடீரென்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதுகுறித்து காவல் துறையினர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், அதிகாலை 3 மணியளவில் ஹார்ட்ஃபோர்டின் தெற்கு பகுதியிலுள்ள ஃபிராங்க்ளின் அவென்யூவில் உள்ள இரவு விடுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 […]
