எரிந்து கிடந்த வைக்கோல் போரில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாகதாசம்பட்டி கிராமத்தில் முருகன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்களது வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டு இருந்த வைக்கோல் போரில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து விட்டனர். அதன்பின் எரிந்து கிடந்த வைக்கோல் போரிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த […]
