இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய குழி தோண்டும் பணியில் ஈடுபட்ட 7 பேரை கதண்டுகள் கடித்தது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் காலனி தெருவில் நாகப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நாகப்பன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இந்நிலையில் நாகப்பனின் உடலை அடக்கம் செய்வதற்காக குழி தோண்டும் பணியில் அதே பகுதியில் வசிக்கும் சத்தியசீலன், சேகர், முருகானந்தம் உள்பட 7 பேர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கூட்டமாக வந்த கதண்டுகள் ஏழு பேரையும் துரத்தி துரத்தி […]
