ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவியுடன், ‘புட்ட பொம்மா’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான படம் தான் ‘அலா வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramloo). கீதா ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் […]
