பரபரப்பாக நடந்த உலக கோப்பை சூப்பர் ஓவரை பார்த்து கொண்டிருந்த போது ஜிம்மி நீஷமின் பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் கார்டன் உயிரிழந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி இதுவரையில் யாரும் பார்த்திராத அளவிற்கு பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்திருந்தது. போட்டி ‘டை’ ஆனதால் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரிலும் முடியாமல் இரண்டு அணிகள் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் ‘டை’ ஆனது. ஐசிசி விதிகளின் […]
