ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று வெளியானது. வழக்கம் போல ரஜினி ரசிகர்கள் இதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். தர்பார் படம் இன்று வெளியானதையொட்டி தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். இந்தியாவில் மட்டும், 4,000 தியேட்டர்களில், ‘தர்பார்‘ படம் வெளியானது. பொங்கல் பண்டிகைக்கு, ஒரு வாரம் முன்னதாகவே வெளியான ‘தர்பார்’ படத்திற்கு, சிறப்பு காட்சிக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது. […]
