பாகிஸ்தான் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கே இருக்கும் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள ஹரிப்பூர் மாவட்டத்தின் தர்பேலா பகுதி ஆற்றில் அங்குள்ள தோர்கார் மாவட்ட நல அமேஜை கிராமத்தை சேர்ந்த 80 பேர் சவாரி செய்தனர். படகு சவாரி மூலமாக அவர்கள் ஹரிப்பூர் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பார்க்காத விதமாக படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 30 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். […]
