பேருந்துகளில் செல்லும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக தொற்று குறைந்ததால் பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கடந்த 8ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]
