தாராபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுவை வாங்கி செல்வதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுவினை வாங்கி செல்கின்றனர். இப்பகுதியில் கடந்த […]
