ஒரு நாளைக்கு இவ்ளோ தண்ணீர் குடிப்பதன் மூலம் நம் உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலும். நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவனின் மொழிக்கேற்ப தண்ணீர் இன்றி இவ்வுலகில் எவ்வுயிரும் வாழ இயலாது. அத்தியாவசியமான இந்த நீரில் பஞ்சம் ஏற்படுமேயானால் அதன் விளைவாக மூன்றாம் உலகப் போர் நிகழும் என்றும் நீரின் தேவையை குறித்து கூறுகின்றனர். நீரற்ற உலகினை ஒருநாளும் கற்பனைகூட செய்து பார்க்க இயலாது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அத்தியாவசியமான ஒன்றாக நீரானது விளங்குகிறது. […]
