‘அசுரன்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முடிவு செய்துள்ளார். எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலுக்கு ‘அசுரன்’ என்ற பெயரில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி திரைவடிவம் கொடுத்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளனர். இப்போது இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கும் விருந்தாக பரிமாறப்படவுள்ளது. படத்தில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது. பஞ்சமி நில அரசியலை முன்வைத்து பேசிய இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் […]
