அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 37 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 12,490 மாணவ-மாணவிகளுக்கு 6.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த இவ்விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் […]
