பேஸ்புக் நட்பால் வாலிபர் 83 ஆயிரம் ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை – பெரம்பலூர் பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் சார்பில் குழாயின் வழியே கேஸ் கொண்டு சேர்ப்பதற்காக குழாய்கள் பதிக்கும் வேலை நடந்து வருகிறது. அதில் குஜராத் மாநிலத்தவரான பருல்சர்மா பொறியியல் பிரிவின் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பேஸ்புக்கில் ஜோசப் ஸ்மித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சர்மாவிற்கு ஜோசப் ஸ்மித் அன்பளிப்பு தரப்போவதாக கூறியுள்ளார். அதன்பின் […]
