மேலாத்தூர் சிறுபாலத்தை சீரமைக்க கோரி SDPI-கட்சி ஆத்தூர் கிளை தலைவர் ஜாகிர் உசேன் அவர்கள் மாவட்ட ஆட்சி தலைவருக்கு மனு அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே மேலாத்தூர் பஞ்சாயத்தில் முத்து வீரன் பாலம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் வெள்ளகோவில், சுகந்தலை, குரும்பூர் செல்லும் ரோட்டில் சிறுபாலம் ஓன்று ஆபத்தான நிலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவ்வழியாக செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பாதை வழியாக பள்ளி பேரூந்துகள் செல்ல முடியாததால் மரந்தலை வழியாக […]
