காவல் நிலையத்தில் இருந்த விசாரணை கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புதுக்கூரைப்பேட்டை பகுதியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, மாதா கோவில் திருவிழாவிற்கு ரேடியோ சர்வீஸ் வேலைக்காக வந்திருந்த அஜித் என்பவர் இந்த சிறுமியை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடத்திச் சென்றுவிட்டார். இதனையடுத்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் […]
