காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய 3 கைதிகளில் ஒருவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி காவல்துறையினர் சத்தியமூர்த்தி நகர் அசோக் பில்லர் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த பிரபல ரவுடியான அஜித்குமார், ஜெகதீஸ்வரன், அஜய் புதா ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் பிடித்து விசாரிப்பதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் […]
