முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காடாம்புலியூரில் உள்ள கும்பகோணம் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் முந்திரி கொட்டையின் மேல் உள்ள தோட்டில் இருந்து எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு அந்த எண்ணெயிலிருந்து மாற்றுப் பொருளாக பவுடர் தயார் செய்யப்படுகிறது. அதன் பின்னர் இந்த பவுடர் வாகன டயர்கள், பெயிண்ட் பிரைட்னஸ் போன்றவைக்கு முக்கிய மூலப்பொருளாக உபயோகப்படுகிறது. […]
