கடலூர் மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் பகுதியில் முருகையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் எதிரே இருக்கும் பழைய இரும்பு கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கடையில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை முருகையன் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த இரண்டு பேரும் முருகையனை மண்வெட்டி மற்றும் இரும்பு குழாயால் பயங்கரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த முருகையன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த […]
