காலணி விவகாரத்தில் சிறுவன் மற்றும் குடும்பத்தினரிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கி வைப்பதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று சென்றார். அப்போது விநாயகர் கோவிலில் வழிபடுவதற்காக அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்றபோது, அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அங்கிருந்த ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து தம்பி இங்கே வாடா, செருப்பை கழற்றுடா என்று கூறியுள்ளார். அச்சிறுவனும் கழற்றி விட்டான். இந்த சம்பவம் நடக்கும் […]
