டெத் ஓவரில் நோபால் வீசியது குறித்து கேப்டன் தோனியையும், அணியையும் தீபக் சாஹர் பெருமையாக கூறியுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியின் போது தீபக் சாஹர் வீசிய 2 ‘நோ பால்கள்’ மிக முக்கியமானது. முதலில் களமிறங்கி விளையாடிய சி.எஸ்.கே 160 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை துரத்திய பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. இதில் சென்னை […]
