நேற்றைய போட்டியில் ஷிகார் தவானின் அசத்தலான சதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல் அணியை எதிர்கொண்டது. வலுவான அணியாக இளம் படைகளுடன் இருக்கும் டெல்லி கேப்பிடல் அணி, அனுபவ வீரர்களுடன் தோல்வியின் பிடியில் சிக்கியிருந்த சென்னை அணியை எதிர் கொண்டது. அடுத்தடுத்து வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணி துரதிஷ்டவசமாக […]
