ரசிகர்கள் தன்னுடைய பெயரைச் சொல்லி கூப்பிடுவதில்லை, அன்பாக தல என்றே அழைக்கின்றனர் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2020ம் ஆண்டுக்கான தொடர் வரும் 29ம் தேதி முதல் துவங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மும்பையில் முதல் போட்டி நடைபெற இருந்தாலும் […]
