அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செய்தித்தொடர்பாளர் ஆர்.சரஸ்வதி டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்லில் அமமுகவுக்கு ஒரே சின்னம் ஒதுக்க முடியாது என்று ஆணையம் கைவிரித்தது.ஒருவரது கட்சியை பதிவு செய்தால்தான் அவர்களுக்கு ஒரே சின்னம் அளிக்க முடியும் என்று ஆணையம் விளக்கம் அளித்த நிலையில் .ஒரு வாரத்தில் தனது அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய டி.டி.வி. தினகரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது […]
