டாஸ்மாக் கடை தொடர்ந்து 3 நாட்கள் மூடப்படுவதால் மதுபானங்களை வாங்க மது பிரியர்கள் குவிந்து விட்டனர். தமிழகத்தில் வருகிற 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இன்று(ஞாயிற்றுக்கிழமை), நாளை(திங்கள்), மற்றும் நாளை மறுநாள்(செவ்வாய்) என மூன்று நாட்கள் டாஸ்மாக் கடை மூடப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்படுவதால் மது பிரியர்கள் மதுபானங்களை வாங்க குவிந்து விட்டனர். அப்போது அரசு நெறிப்படுத்திய வழிமுறைகளை கடைபிடிக்காமல், கொரோனா தொற்று அச்சமில்லாமல் […]
