ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தீயணைப்புத்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள வன்னியம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் வீரராஜ் வயது 45 . இவர் விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள கள்ளிக்குடி தீயணைப்பு நிலையத்தில் அலுவலராக வேலை செய்து வருகிறார்.நேற்று வீரராஜ் வேலைக்கு சென்றதால் அவரது மனைவி சங்கீதா இரவு 10 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இதனை தினமும் நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவு வீட்டிற்குள் […]
