முன்னாள் பாஜக இளைஞரணி பொறுப்பாளரை வெட்டிக் கொலை செய்த கும்பலை காவல் துறையினர் தேடிவருகின்றனர். புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் பாலாஜி. பாஜக முன்னாள் இளைஞரணி பொறுப்பாளரான ஆனந்த் பாலாஜி, எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தநிலையில் ஆனந்த் பாலாஜி நேற்று மாலை புதுச்சேரி விவேகானந்தா நகர் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள, கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது தேநீர் கடைக்கு வந்த 4 நபர்களுக்கும், ஆனந்த் பாலாஜிக்கும் […]
