தன்னை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியோடு ஒப்பிடுவது சரியானதாக இருக்காது என யு19 உலகக்கோப்பையை வென்ற வங்கதேச கேப்டன் அக்பர் அலி தெரிவித்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்துக் கோப்பையைக் கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் வெற்றிபெறுவதற்கு வங்கதேச அணியின் முதன்மை மற்றும் முக்கியக் காரணமாக வங்கதேச கேப்டன் அக்பர் அலி இருந்தார். ஒருமுனையில் இருந்துகொண்டு முகத்தில் எவ்வித சலனமுமின்றி வலிமையான இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலைச் சமாளித்து […]
