இளைஞர்களிடையே 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வகையில் கிரிக்கெட் போட்டியை அதிகாரிகள் துவங்கி வைத்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்தியநாதன் இளைஞர்களிடம் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்துள்ளார். […]
