சோளிங்கர் அருகேயுள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 16 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகேயுள்ள கொண்டமாநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு பட்டாசு குடோன் உள்ளது. அதில் வாலாஜாவை சேர்ந்த சரவணன், சதீஷ் ஆகியோர் நேற்று காலை பணியில் இருந்து , வேனில் இருந்த பட்டாசு பெட்டிகளை குடோனுக்குள் இறக்கி வைத்தனர்.அப்போது பட்டாசுகள் ஒன்றோடு ஓன்று உரசி திடீரென வெடித்தது.இதனால் குடோன் முழுவதும், தீப்பொறி மளமளவென பரவி அனைத்து பட்டாசுகளும் ஒரேநேரத்தில் வெடித்து சிதறியது. […]
