சேலம், திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.. இன்று 5ஆவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் சென்னையில் மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சியை ஆய்வு செய்தபின் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 32,017 இடங்களில் 5வது தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 48.6 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும் 7 […]
