தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. நேற்று தமிழகத்தில் 58 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக இருந்தது. இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். […]
