நெல்லையில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 42 பேரில் 41 பேர் வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை திரும்பியவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியானவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136 ஆக இருந்தது. அதில் 63 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். […]
