கேரளாவில் மேலும் 21 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் கொல்லம் பகுதியை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணும் அடங்குவார். இதையடுத்து கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,000 நெருங்கியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 131 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா […]
